A : Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்
B : Behaviour
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C : Compromise
அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
D : Depression
புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
E : Ego
மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
F : Forgive
கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
G : Genuineness
எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
H : Honesty
தவறு செய்தால், உடனே மன்னிப்பு கேட்பதை
கௌரவமாகக் கருதுங்கள்.
I : Inferiority Complex
நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J : Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே அழிக்கும்.
K : Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
L : Loos Talk
சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M : Misunderstanding
மற்றவர்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
N : Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்து விட்டு பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவற வேண்டாம்.
O : Over Expectation
அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
P : Patience
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்.
Q : Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சினைகளுக்கு காரணம் தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்து விட்டுப் போங்கள்.
R : Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S : Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T : Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
U : Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
V : Voluntary Talk
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சினை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துகளுக்கு காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள்.
W : Wound
எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X : Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y : Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
Z : Zero
இவை அனைத்தையும் கடைபிடித்தால் பிரச்சினை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
0 comments:
Post a Comment