A : One, Any, - ஒரு, ஓர்.
A-1 : First rate, Excellent - முதல் தரமான.
Aback : Backwards, By surprise - பின்னுக்கு, திடீரென, திடுக்கிடும் படி.
Abaft : At the hind part - பின்தாக்காக, பின்புறமாக.
Abandon : Give up, Desert, Freedom exercised carelessly - கைவிடு, விட்டுவிடு,
அலட்சியமான துணிவு.
Abandoned : Deserted - கைவிடப்பட்ட.
Abase : Degrade - தாழ்த்து, இழிவுசெய்.
Abasement : Decrease, Degradation - குறைத்தல், தாழ்வு, இழிவு செய்தல்.
Abash : Put to shame - வெட்கப்படுத்து, தலைகுனியச் செய்.
Abate : Lessen, Make void, Declare as against law - குறை, தணி(வி), சட்டப்படி
செல்லாததாக்கு, ரத்து செய்.
Abbess : Lady superior in charge of a convent - கன்னிமடத் தலைவி.
Abbey : A house for monks, convent - ஆசிரமம், மடம், கன்னிமடம்.
Abbot : Superior in charge of an abbey - மடாதிபதி.
Abbreviate : Shorten - குறை, சுருக்கு.
A,B,C : Elementary principles - அடிப்படைத் தத்துவங்கள்.
Abdicate : Give up, Renounce (Title or Throne) - (இராச்சிய அதிகாரத்தைக்)கைவிடு
(உரிமையைக்)கைவிடு.
Abdomen : Belly - உதரம், அடிவயிறு, வயிறு.
Abduct : Kidnap - பலாத்காரமாகக் கொண்டு செல்.
Abduction : The act of kidnapping - கடத்திச் செல்லல்.
Abed : In bed - படுக்கையில், (நோயுற்று) படுக்கையாக.
Aberration : Deviation from the right course - வழி(நேர்மை)யிலிருந்து விலகுதல்,
புத்தி மாறாட்டம்.
Abet : Assist ( in an offence ) or encourage (an offender) - (தீச் செயலுக்குத்) துணை
செய், (குற்றவாளிக்கு ஆதரவளி.
Abetter, Abettor : One who abets - தூண்டுகிறவன், உடந்தையாய் இருப்பவன்.
Abeyance : Temporary inactivity Putting off - கொஞ்ச காலம் வரை நிறைவேறாமை,
தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்.
Abhor : Detest, Hate - வெறு.
Abhorrence : State of being detestable, Thing which detests - வெறுப்பூட்டும் நிலை,
வெறுப்பூட்டும் ஒன்று.
Abide : Dwell, Remain firm, Await - வசி, உறுதியாக (இரு) நில், காத்திரு.
Abiding : Lasting - நீடித்துள்ள, நிரந்தரமான, நிலையான.
Ability : Skill, Strength - திறமை, சக்தி.
Abject : Mean, Low - இழிவான, தாழ்வான.
Abjuration : The act of giving up on oath -- உறுதி கூறி (கைவிடுதல்) விலக்குதல்.
Abjure : Give up on oath - உறுதி கூறிக் கைவிடு.
Visitors
சரஸ்வதி துதி
இன்னறுங் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
-மஹாகவி.சுப்பிரமணியபாரதியார்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
-மஹாகவி.சுப்பிரமணியபாரதியார்
விழி தானம் செய்வோம்!
விழியில்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்!
இறந்த பின்னும் இந்த உலகைக் காண்போம்!