அறிவியல் கண்டுபிடிப்புகள் - காமிரா (Camera)
‘எந்த ஒரு மனிதனுக்கும் உலகிலேயே தானே அழகானவன் எனும் கர்வம் உண்டு. தன் முகத்தைத் தான் இன்னொரு இடத்தில் பார்க்கும்போது அவனின் கர்வத்திற்கு எல்லையே இல்லை. இதுவே உளவியல் எனும் கருத்தை மெய்ப்படுத்திய கருவியே பிரெஞ்சு நாட்டு அறிஞர் ‘ஜோசப் நைஸ்போர்’ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ‘நிழலை நிஜமாக்கும் காமிராவாகும்’. இக்கருவி மட்டும் கண்டறியப்படாமல் இருந்திருந்தால் நம் முன்னோர்களின் முகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கூட இல்லாமல் போயிருக்கும்.
கி.மு. 4ம் மற்றும் 5ம் நூற்றாண்டுகளிலேயே கிரேக்கர்களும், சீன தத்துவ ஞானிகளும் காமிராவின் அடிப்படைத் தத்துவங்களைப் பற்றித் தெரிந்திருந்தனர். கிரேக்க நாட்டு தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் காமிராவைப் பற்றி 300 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார். ஒளிக்கற்றையானது இருட்டறையில் சிறுதுளையின் மூலம் அனுப்பப்படும்போது அதில் குறுக்கிடும் பொருளானது தலைகீழ் பிம்பமாக மாறித் தெரியும். இதுவே காமிராவின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
18ம் நூற்றாண்டில் இத் தத்துவமானது ஓவியக் கலைஞர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1816ம் ஆண்டு பிரெஞ்சு அறிஞர் ஜோசப் நைஸ்போர் (Joshep Nicephore) இந்தக் காமிராவின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு கருவியைக் கண்டறிந்தார். அதன் பெயர் ஹீலியோகிராஃபி (Heliography). ஒரு இயற்கைக் காட்சியை படம்பிடித்து அதை வெள்ளி குளோரைடு தடவப்பட்ட தாளில் மாற்றிக் காட்டினார். முதலில் தோல்விகளைக் கண்டாலும் வெவ்வேறு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தித் தனது 6 ஆண்டுகள் முயற்சிக்கு 1822ம் ஆண்டு ஒரு முழுமையான காமிரா வடிவத்தை உருவாக்கினார். படம் தெளிவாக உருவாவதற்குரிய நேரம் அதிகம் என்பதால் தனது கண்டுபிடிப்பை லூயிஸ், டாக்கூர் (Daguerre) என்பவர்களிடம் 1929ம் ஆண்டு கொடுத்தார். டாக்கூர் போரின் புகைப்படக்கலை வளர்ச்சிக்கு அதிகம் துணைபுரிந்தார். இவர் புதிய காமிராக்களை வடிவமைத்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் மனிதன் தான் காணும் காட்சியின் அழகை நினைவில் நிறுத்த முயன்று தோற்றுப் போனான். தான் பார்த்த நிகழ்வை, இயற்கை நிகழ்வை அப்படியே கல்வெட்டிலும், ஓலைச்சுவடிகளிலும் எழுதி வைத்தான். ஆனாலும் அந்தக் கண்காட்சியை மீண்டும் காண முடியவில்லையே எனும் ஏக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது. காமிரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு காட்சிகளை புகைப்படமாக பதிவு செய்தான். இரவிலும் மிகத் துல்லியமாகக் காட்சிகளைப் பதிவு செய்யூம் IR (Infra Red) நவீன காமிராக்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. Film (படச்சுருள்) இல்லாமலே புகைப்படம் பிடிக்கும் Digital காமிராவும் வந்துவிட்டன. இன்று செல்பேசியில் கூட காமிரா இருக்கிறது.
இன்று காமிரா அனைவின் கையிலும் புழங்கும் சாதாரண பொருளாகிவிட்டது.
- நா. சங்கரராம பாரதி.
திருநெல்வேலி.
தொடர்பு எண்: 9994171074
0 comments:
Post a Comment