ஒரு சமுதாயம், ஒரு தலைமுறை, ஒரு தேசம் பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், ஞானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் சிறப்புடையதாக திகழ நல்ல மனிதர்களை உருவாக்கும் சமுதாய சிற்பிகளாக திகழ்பவர்கள், திகழ வேண்டியவர்கள் ஆசிரியர்கள் ஆவர். பண்டைய காலங்களில் ஆசிரியர்களுக்கென்று தனி மரியாதையினை தங்களது நடவடிக்கைகள் மற்றும் வாழ்வு நெறியின் மூலம் நிலை நிறுத்திக் கொண்டனர் அக்கால ஆசிரியர்கள். அதே போல மாணவர்களும் குருபக்தியில் சிறந்து விளங்கினர். தற்காலத்திலும் அதே போன்ற ஆசிரியர்களும், மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், அத்தகைய சிறப்புக்கு களங்கம் விளைவிப்பதாக தனது நிலையிலிருந்து தவறும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் பற்றிய செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயமாகவே உள்ளது.
ஒரு ஆசிரியராக இருந்து நமது நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்து, தான் கொண்ட பதவிக்கெல்லாம் கௌரவத்தினை உருவாக்கிய டாக்டர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்வினை உணர்ந்தாவது ஆசிரியர்கள் தம் பணிக்கு பெருமை சேர்த்திடும் வகையில் சிறப்புடன் செயல்படுவார்கள் என்று நம்புவோமாக.

வாழ்க ஆசிரியர் சேவை!
0 comments:
Post a Comment