சர்க்கரை நோய் (DIABETES MELLITUS):
வேகமாக வளர்ந்துவரும் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது சர்க்கரை நோய். உலக மக்கள் தொகையில் இதுவரை 230 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதில் 41 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மேலும் 2025-ல் ஐந்தில் ஒரு இந்தியர் சர்க்கரை நோயினால் பாதிப்படைவார்கள் என்று மருத்துவ கணிப்புகள் கூறுகின்றன. எந்திர மயமாகும் இன்றைய சூழலில் நம் பாரதத்தினை ‘டயாபடிஸின் தலைநகரம்’ என்று உலக நாடுகள் கூறுவதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. உணவே மருந்து, மருந்தே உணவு, என்று வாழும் நம் கலாசாரத்தில் சர்க்கரைநோய் பரவலாகக் காணப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. பழமையான ரிக் வேதத்தில் சர்க்கரைநோய் குறித்து பல தகவல்கள் கூறப்பட்டுள்ளதால் அது பண்டைய காலம் தொட்டே இருந்துவரும் நோய்களில் ஒன்றாகும்.
ஆயுர்வேதத்தில் இருபது வகையான பிரமேஹங்கள் (சர்க்கரை நோய்) கூறப்பட்டுள்ளன. உடற்பயிற்சியின்மை, சுகபோகமான வாழ்க்கை முறை, மிருதுவான இருக்கையில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், அதிக உறக்கம் குறிப்பாக பகலில் நீண்ட நேரம் உறங்குதல், மீன் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களின் இறைச்சியை அதிக அளவில் உண்ணுதல், உடல் உழைப்பில்லாத போது இனிப்பு பதார்த்தங்களை உண்ணுதல் போன்றவை பிரமேஹ நோய் உண்டாவதற்கான காரணங்களாக ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. பற்கள், கண்கள், மூக்குத் துவாரங்கள் மற்றும் காதுகளில் அதிகப்படியான அழுக்குப் படிதல், கைகள் மற்றும் பாதங்களில் எரிச்சல் ஏற்படுதல், சருமத்தில் பிசுபிசுப்புத் தன்மை, நீர் வேட்கை (தாகம்), வாயில் இனிப்பு சுவை ஏற்படுதல், சிறுநீர் கழித்த இடங்களில் எறும்பு மொய்த்தல் ஆகிய அறிகுறிகள் பிரமேஹத்தின் பூர்வரூபங்களாக சொல்லப்பட்டுள்ளன.
நவீன மருத்துவத்தில் Type I (இன்சுலின் சார்ந்தது) Type II (இன்சுலின் சாராதது) என்று டயாபடிஸை பிரிக்கின்றார்கள். Type I டயாபடிஸ் குழந்தைகளுக்கும், சிறுவயதினருக்கும் பரம்பரையாக ஏற்படுவது. Type II டயாபடிஸ் பரம்பரையாகவோ அல்லது உடற்பயிற்சியின்மையினால் பெரியவர்களுக்கு ஏற்படுவது. இரத்தத்தில் அளவுக்கு அதிகமான சர்க்கரை சத்து (GLUCOSE) தேங்கி நிற்கும் நிலை டயாபடிஸ் ஆகும். சாதாரணமாக 80 mg|dl முதல் mg |dl வரை இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவிலுள்ள கார்போஹைட்ரேட், ப்ரோட்டின் மற்றும் லிபிட்டுகளிலிருந்து உருவாகும் சர்க்கரை சத்தினை (GLUCOSE) செல்கள் உறிஞ்சுவதற்கு கணையத்தின் B-செல்களினால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்ற ஹார்மோன் அவசியமாகின்றது.
இன்சுலின் உற்பத்தி இல்லாவிட்டாலோ அல்லது உற்பத்தியிலோ, பயன்பாட்டிலோ ஏதாவது குறை ஏற்படும்போது சர்க்கரை சத்து இரத்த ஓட்டத்திலேயே தங்கிவிடும். இதனால் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகங்கள் சர்க்கரையினை இரத்தத்திலிருந்து பிரித்து சிறுநீரின் வழியாக வெளியேற்றும். நீர்ச்சத்து மற்றும் சர்க்கரைச் சத்தின் குறைபாட்டினால் உடலிலுள்ள அனைத்து மண்டலங்களுமே நாளடைவில் பாதிப்படையத் தொடங்கும். குறிப்பாக நரம்பு மண்டலம், சிறுநீரக மண்டலம் மற்றும் கண்கள் பாதிக்கப்படும்.
Type I விட Type II டயாபடிஸ் மிகவூம் பரவலாக காணப்படக் கூடிய ஒன்று. ஆனால் இன்றைய காலகட்டத்தில் Type II விலும் இன்சுலின் தேவை அதிகரித்து வருகின்றது. கணையத்தின் B-செல்கள் பரம்பரையாக செயல்திறன் குறைபாடடைதல், இன்சுலின் ஹார்மோன் | என்சைமின் செயல்திறன் பரம்பரையாகக் குறைதல், கணையத்தில் ஏற்படும் வேக்காடு மற்றும் கட்டிகள், இன்சுலினுக்கு எதிரிடையான ஹார்மோன்கள் அதிக அளவில் சுரத்தல், கார்டிகோ ஸ்டீராய்டுகள், தியாசைடு டையூரடிக்ஸ், பெனிடாயின் மருந்துகளின் உபயோகம், கன் ஜெனிமல் ரூபெல்லா, மம்ஸ், கோக்ஸாகி வைரஸ் B போன்றவைகளின் தொற்று மற்றும் வேறு வகையான மரபியல் நோய்களின் கூட்டு ஆகியவை Type II டயாபடிஸின் முக்கிய காரணங்களாக அலோபதி மருத்துவ முறையில் கூறப்படுகின்றது.
அடுத்தது Type II டயாபடிஸின் அறிகுறிகளைப் பார்ப்போம்.
தண்ணீர் தாகம், நா வறண்டு போதல், அதிக அளவிலான சிறுநீரை அடிக்கடி வெளியேற்றுதல் (POLYURIA), இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் (NOCTURIA), சோர்வு, சுறுசுறுப்பின்மை, மயக்கம், உடல் எடை குறைதல், பார்வை தெளிவின்மை, பிறப்புறுப்புகளில் கேன்டிட் தொற்று ஏற்படுதல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல் (NAUSEA), தலைவலி, இனிப்பு சுவையில் நாட்டம் அதிகமாகுதல், மன அழுத்தம், கவனக்குறைபாடு, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமம் போன்றவை Type II வின் முக்கிய அறிகுறிகள் ஆகும். யூரின் சுகர் டெஸ்ட், யூரின் கீட்டோன்ஸ் டெஸ்ட், OGTT, FPG (ஃபாஸ்டிங் ப்ளட் குளுகோஸ்), PPG (போஸ்ட் ப்ராண்டியல் குளுகோஸ்) RPGT (ராண்டம் ப்ளாஸ்மா குளுகோஸ் டெஸ்ட்), H6A10 ப்ளட் டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் சர்க்கரை நோயினைக் கண்டறியலாம்.
ஆயூர்வேத சிகிச்சை முறைகள்:
பிரமேஹ ரோகம் (டயாபடிஸ்) தீர்மானிக்கப்பட்ட பின் முதலில் ரோகியின் உடலமைவைப் பொருத்து இலங்கன சிகிச்சை செய்ய வேண்டும். நோயாளி பலமற்றவனாக இருக்கும் பட்சத்தில் பிரும்ஹண சிகிச்சை செய்ய வேண்டும்.
கப தோஷம் அதிகரித்துள்ள நிலையில் வமனமும் (வாந்தி செய்வித்தல்) பித்த தோஷம் அதிகரித்துள்ள நிலையில் விரேசனமும் (பேதி செய்வித்தல்) கொடுக்க வேண்டும். அப்யங்கம் (OIL MASSAGE), உத்வர்த்தன சிகிச்சை போன்றவைகளை செய்ய வேண்டும்.
ஆயுர்வேத மருந்துகள்:
நிசா ஆமலகி சூரணம், திரிபலா சூரணம், நிசா கதகாகி கஷாயம், கதக கதிராதி கஷாயம், அயஸ்கிருதி, சந்ர பிரபா வடி, சிவ குளிகை, தான்வந்தரம் கிருதம், நவாயஸ சூர்ணம் போன்ற மருந்துகள் மிகுந்த பலனையளிக்கும்.
சில ஹோம் ரெமடிஸ்:
*நெல்லிக்காய் ஜுஸ் 25மிலி+2கிராம் மஞ்சள் தூள்+10 கிராம் தேன் சேர்த்து காலை, மாலை உணவிற்கு முன் அருந்த வேண்டும்.
*(கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய்) திரிபலா +தேவதாரு+கோரைக் கிழங்கு சூரணம் (பொடி) சம அளவில் சேர்த்து 25 கிராம் எடுத்து 400 மிலி தண்ணீர் சேர்த்து 50 மிலியாக வற்ற வைத்து அதனுடன் 25 கிராம் தேன் சேர்த்து அருந்த சர்க்கரை வியாதி தீரும்.
*சீந்தில் கொடி சாறு 50மிலி-யுடன் தேன் 25 கிராம் சேர்த்து உண்ண சர்க்கரையின் அளவு குறையும்.
*திரிபலா சூரணம் 3 கிராமுடன் 10 கிராம் தேன் சேர்த்து காலை, மாலை உண்டுவர பிரமேஹம் தணியும்.
*ஆவாரம் பூ, நாவல் பழ கொட்டை, சிறுகுறிஞ்சான், சர்க்கரைக் கொல்லி போன்ற மருந்துகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ பொடி செய்து சாப்பிட சர்க்கரை வியாதி குறையும்.
*குடுசி சத்வம் (சீந்தில் சர்க்கரை) 500 மிலி கிராம் தேன் சேர்த்து காலை, மாலை இருவேளை உண்டுவர டயாபடிஸ் குறையும்.
*தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு 25 மிலி-யுடன் பசும்பால் 50 மிலி சேர்த்து குடித்து வர சர்க்கரையினால் உண்டாகும் சோர்வு மற்றும் பலமின்மை தீரும்.
கடைபிடிக்க வேண்டிய பத்திய முறைகள்:
எந்த வகையான உடற்பயிற்சியாக இருந்தாலும் அது சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும். முறையான நடை பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொள்ளு, பாசிப்பயறு, பட்டாணி, பொறியினால் செய்த வெஜிடபுள் சூப் சாப்பிடலாம். பார்லி அரிசி 1 பங்குடன் 4 மடங்கு தண்ணீர் சேர்த்து செய்த கஞசி நல்ல பலனையளிக்கும். பழைய கோதுமை, சாலி வகை அரிசி, பழைய தானியங்கள், மோர், முருங்கை, புடலை, பாகற்காய், நுங்கு, கண்டங்கத்திரி, அத்தி, பூண்டு, வாழைப்பழம் புதியது, தர்பூசணி, விளாம்பழம், நாவல், பேரீச்சை, தாமரைத் தண்டு, திரிகடு, திரிபலா, சீந்தில் போன்றவைகளை உண்பது நல்ல பலனையளிக்கும்.
சிறுநீர் அடக்குதல், புகை பிடித்தல், ஸ்வேதன சிகிச்சை (Steam Bath), இரத்த மோக்ஷனம், பகலில் உறங்குதல், அதிகம் தாம்பத்யம் கொள்ளுதல், தயிர், இனிப்பு சுவையுள்ள பதார்த்தங்கள் போன்றவை சர்க்கரை நோயினை அதிகப் படுத்தும். தேன் இனிப்பு சுவை கொண்டிருந்தாலும் அது சுக்ரோஸ் வகையைச் சேர்ந்ததால் நோயினை அதிகப்படுத்துவது இல்லை. உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியினால் கண்டிப்பாக சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
Dr.A.சதீஷ்குமார் B.A.M.S
ஆலோசனை மருத்துவர், அஷ்டாங்க ஆயுர்வேதிக் கிளினிக், திருச்சி.
Cell:9894674424

0 comments:
Post a Comment