கண்டுபிடிப்புகளும்… கண்டுபிடிப்பாளர்களும்..!
திரைப்படம் - Cinema (Motion Picture)
‘இருட்டறையில் உள்ளதடா உலகம்’ என்பாட் பாரதிதாசன். வெளிச்சங்களை இவர்கள் இருட்டிலே தேடுகிறார்கள். நாளைய முதல்வர்களை தீர்மானிக்கும் இடமாக திரையரங்குகள் மாறிவிட்டன. மாபெரும் சக்தியாக திரைப்படங்கள் உருவாகிவிட்டன. இத்தகைய திரைப்படங்களை முதன்முதலில் திரையிட்ட பெருமை லூமியர் சகோதரர்களையேச் சாரும்.
1824-ம் ஆண்டு பீட்டர் மார்க் ராக்கட் (Peter Mark Roget) என்பவர் கண்ணில் நிற்கின்ற அசையும் பொருட்களின் நிலைப்பாட்டினைத் தன் ஆய்வின் மூலம் விளக்கினார். 1878-ம் ஆண்டு கலிஃபோர்னியா மாகாணத்தின் கவர்னர் லேண்ட் ஸ்டான்ட் ஃபோர்டு (Land Stanf Ford) ‘குதிரைப் பந்தயங்களில் வேகமாக ஓடும் குதிரைகளின் அனைத்து கால்களும் ஒருசில விநாடிகள் அந்தரத்தில் பறப்பது போலத் தெரியும்’ என்று வாதிட்டார். தனது கூற்றை மெய்ப்பிப்பதற்காக பல புகைப்படக் கலைஞர்களை வைத்து குதிரைப் பந்தயங்களை பல கோணங்களிலும் புகைப்படம் எடுத்தார். இதுவே திரைப்படத்திற்கு அடிகோலியது. தாமஸ் ஆல்வா எடிசனின் ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரிந்த வில்லியம் கென்னடி லௌரி டிக்சன் (William Laury Dickson) என்பவர் ஒரு கருவியை வடிவமைத்தார். இது மிக அதிக எடை கொண்டதாக இருந்ததால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி அகஸ்டஸ் லூமியர் மற்றும் லூயிஸ் லூமியர் என்ற சகோதரர்கள் 1895-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி ஒரு கருவியை வடிவமைத்துத் திரைப்படக் கண்காட்சியை பாரிசு (Paris) நகரில் நடத்தினர். அக்கருவிக்கு ‘சினிமோட்டோஃகிராபி’ (Cinematography)) என்று பெயரிட்டார்கள். இக்கருவி எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதாக இருந்ததால் இதைப் பல நாடுகளுக்குக் கொண்டு சென்று திரைப்படக் கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்தினார்கள்.
இன்றைய சூழலில் உலக அளவில் அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய பொழுதுபோக்கு சாதனமாக விளங்குவது திரைப்படம் எனில் அது மிகையாகாது.
அசையாமல் இருக்கும் புகைப்பட பிம்பங்களை அசைய வைத்துப் பார்க்க ஆசைப்பட்டான் மனிதன். இதன் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட கலையே திரைப்படக்கலை. ஒரு அட்டையில் புகைப்படங்களை ஒட்டி அதை ஒரு பெட்டிக்குள் வைத்து, அப்பெட்டியினுள் இருந்த அச்சை வேகமாக சுழற்றிப் பார்த்தான். இதன் காரணமாக புகைப்படத்திலுள்ள பிம்பங்கள் அசைவது போல ஒரு பிரமை உண்டானது. இதுவே உலகின் முதல் திரைப்பட முயற்சி.
லூமியார் சகோதரர்கள் எடுத்த திரைப்படங்கள் அன்றாட வாழ்க்கையில் நாம் பாHக்கும் விஷயங்களாக இருந்தன. இரயில் நிலையத்திலிருந்து ஒரு இரயில் புறப்படும் காட்சியே முதன்முதலில் லூமியர் சகோதரர்களால் படமாக்கப்பட்டது. திரையில் இந்தக் காட்சியைப் பார்த்த பார்வையாளர்கள் இரயில் திரையரங்கிற்குள் உண்மையிலேயே நுழைவதாகவே நினைத்து பயந்தனர். இந்தப் படத்திற்கு Arrival of a Train at the Station எனப் பெயரிட்டிருந்தனர்.
- நா. சங்கரராம பாரதி.
திருநெல்வேலி.

0 comments:
Post a Comment