டிசம்பர்..
இருபத்து நான்கு..
நள்ளிரவு..
“கிருஸ்துமஸ்”
நாடே சிலிர்க்கிறது!
டிசம்பர்..
முப்பத்தொன்று..
நள்ளிரவு..
ஆங்கிலப் புத்தாண்டு..
நாடே மகிழ்கிறது!
தையா? சித்திரையா?
துமிழ்ப் புத்தாண்டு..
தடுமாறு கின்றது!
ஆகஸ்டு..
புதினான்கு..
நள்ளிரவு..
“சுதந்திரம்”
நாம் பெற்றது.
இந்தியத்தில்..
இன்னும்..
விழிப்பில்லை!
விடியலில்லை!
பெற்ற சுதந்திரத்தைப்
பேணாத காரணத்தால்..
நாட்டை..
விற்றே வரவு வைக்கும்
வியாபாரம் தொடர்கிறது.
பூரிப்பும்..
கொண்டாட்டமும்..
போலிகளுக்கே!
மதவெறிக் காளாகி..
மாண்டு போன..
மகாத்துமனே!
நீ...
மீண்டு வர வேண்டுகிறேன்!
மேன்மையுறா..
பாரதத்தில்
மீண்டும் ஓர் வேள்வி செய்ய...
விடுதலைக்காக!
சுதந்திரத்துக்காக!
---------------------------------------------------------------------------------------------------------------
கழியாப் பழமைத் துயரமெல்லாம்
கதையாய்க் கனவாய்க் கரையட்டும்
ஒழியா ‘ஞான’ விளக்கினருள்
ஒளியால் சாந்தி பரவட்டும்!
கவிமுகில் -கவிஞர் தாமரைச் செல்வன்.
திருவானைக்காவல்.
0 comments:
Post a Comment