நல்லாசிரியர் இயல்
2.ஆசிரியர் பண்பு
11.அருண்ணிறை நீங்கிடாத அன்பென்னும் பண்பின்
உருவினான் ஆசான் உணர்.
பொருள்: அருளின் நிறைவு நீக்கிடாத, அன்பென்னும் பண்பின் உருவத்தவனே ஆசிரியன் என்று உணர்க.
12.அல்லன காய்ந்தொழில் நல்லன காத்திடும்
வல்லிறைமை ஆசானின் பண்பு.
பொருள்: தீயனக் கடிந்து, அழகுடைய நல்லனக் காக்கும் வலிய இறைமைப் பண்பே ஆசிரியன் பண்பு.
13.கொண்டசீர்க் கொள்கையில் என்றென்றும் வாழ்ந்திடுதல்
மண்டுபுகழ் ஆசானின் மாண்பு.
பொருள்: தான் கொண்ட சிறப்புடைய கொள்கையில் வாழ்ந்திருத்தல் புகழ் நிறைந்த ஆசிரியனின் மாட்சி.
14.உண்பொருள்யா வுள்ளும் உயர்வுற உள்ளுவது
எள்ளலில் ஆசான் எழில்.
பொருள்: எண்ணுவன எல்லாவற்றுள்ளும் உயர்வுடையவற்றையே எண்ணுவது. பிறர் நகைப்பு இல்லா ஆசிரியனின் அழகு.
15.எப்பொருளும் நன்குணர்ந்து ஏற்கத் தெளிந்துரைத்தல்
ஓப்பில்லா ஆசான் ஒழுக்கு.
பொருள்: எப்பொருளின் பொருளையும் நன்கு அறிந்து (மாணவர்) ஏற்கும்படியாகத் தெளிவுற சொல்லுதல் ஒப்பு ஒருவரும் கூறமுடியாத ஆசிரியனின் வழிமுறையாகும்.
16.சொல்லும்சொல் நன்கறிந்து வெல்லுஞ்சொல் தேர்ந்துரைக்கும்
நல்லாசார்க்(கு) இல்லை நிகர்.
பொருள்: சொல்லும் சொல்லினை நன்கு உணர்ந்து, அவற்றுள் வெல்லும் சொல்லைத் தேர்ந்தறிந்து சொல்லும் நல்ல ஆசிரியர்க்கு ஒப்பாக எவரும் இலர்.
17.நிலமென்னும் நல்லாள்போல் தான்பொறுத்து அன்பால்
நலமீய்வான் ஆசான் நமக்கு.
பொருள்: நிலமகள் போலப் பொறுமை கொண்டு அன்பாக நலம் தருவோன் நமக்கு ஆசிரியன்.
18.மலைபோல் உயர்வு விளக்கமுடன் ஈகை
நிலைகொள்ளல் ஆசான் நிலை.
பொருள்:மலையைப் போன்ற உயர்வும், விளங்கும் தன்மையும், (வறுமை காலத்தும்) ஈயும் ஈகையும் நிலையாகக் கொள்ளுதல் ஆசிரியரின் நிலைப்பாடாகும்.
19.தற்சார்(பு) எணாது நிலைசொல் நிறைகோலாய்
நிற்றலே ஆசான் நிறை.
பொருள்: அயலவர் தன்னவர் என்பாரின்றி தன்னைச் சார்ந்தவர் என்ற நிலையை எடுக்காது உள்ளநிலையைக் கூறும் தராசுபோல நடுநிலை நிற்பதே ஆசிரியர்க்குக் கற்பு (முழுமை) ஆகும்.
20.மலரன்ன நன்மலர்ச்சி, தேன்,மணம், நல்கல்
நிலம் விளங்(கு) ஆசான் நெறி.
பொருள்: மலரைப் போல நல்ல முக மலர்ச்சியும், தேனைப் போன்ற இனிமையும், மணமும் தருதல் இப்பூவுலகில் வாழும் ஆசிரியனின் ஒழுக்கம் ஆகும். (தொடரும்..)
மூலமும் கருத்துரையும் :
நல்லாசிரியர் பேரா. பூவை. சு.செயராமன்.
தமிழ்த்துறைப் பேராசிரியர், மீனாட்சி இராமசாமி (மெரிட்டு) கல்வியியல் கல்லூரி, தத்தனூர்.
தொடர்பு எண்: 9788031886

0 comments:
Post a Comment