முடக்குவாதம் - RHEUMATOID ARTHRITIS
முடக்குவாதம் ஆமவாதம் என்று ஆயூர்வேத மருத்துவத்தில் அழைக்கப்படுகின்றது. RA என்று சுருக்கமாக கூறப்படும் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் AUTO IMMUNE DISORDER வகையைச் சேர்ந்தது. சைனா மற்றும் ஆப்பிhpக்காவில் பரவலாகக் காணப்பட்டாலும் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள் என சமீபகால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முடக்குவாதம் என்ற சொல்லிற்கேற்றார் போல் 40 சதவிகித நோயாளிகள் மூன்று வருடத்திற்குள் முடங்கி விடுகிறார்கள். மேலும் அவர்களின் வாழ்நாள் 8 முதல் 15 வருடங்கள் வரை குறைந்து விடுவதாகவும்இ இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆமவாதம் என்ற கொடிய முடக்குவாத நோயானது கி.பி.700 ஆம் நூற்றாண்டுகளில் மாதவகரா என்ற ஆயூர்வேத ஆச்சார்யாரால் முதன்முதலில் விளக்கப்பட்டது. எண்டோ ஜெனியஸ் டாக்ஸிக் சப்ஸ்மர்ஸஸ் ஆமம் என்ற காரணி இரத்த ஓட்டத்தில் கலந்து, எலும்பு மூட்டுக்களில் சேர்ந்து, மூட்டுக்களை முடக்கி விடுவதுடன் இதயத்தினையும் பாதிக்கின்றது என்று கூறினார். பிற்காலத்தில் மருத்துவர்கள் RA வினால் பாதிப்படைந்த நோயாளிகளின் இரத்த மாதிரிகளை சோதனை செய்யும் பொழுது பிரத்யேகமான ஒரு காரணி அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தனர். அதுவே பின்பு ருமடாய்ட் பேக்டர் (RF) என்று அழைக்கப்பட்டது.
இந்தியர்களில் HLA – DR1 ஜீன் அமைப்பு மற்றும் முறையற்ற உணவு முறைகள் RA ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன. கிருமி தொற்றினால் (INFECTION) RA வரும் என்று நம்பப்பட்டாலும் இன்றுவரை காரணமான எவ்வித கிருமியும் கண்டுபிடிக்கப்படவில்லை. உடற்பயிற்சியின்மை, கொழுப்பு மிகுந்த உணவினை உட்கொண்டவுடன் உடற்பயிற்சி செய்தல், செரியாமை, ஒன்றுக்கொன்று எதிரிடையான உணவுகளை சாப்பிடுதல் குறிப்பாக தயிருடன் மீனை சேர்த்து உண்ணுதல், இயற்கை உபாதைகளை அடக்குதல், இரவில் உறங்காமல் பகலில் உறங்குதல், மன அழுத்தம் போன்றவை ஆமவாதத்தினை உருவாக்கும் முக்கிய காரணங்கள் ஆகும்.
அறிகுறிகள்:
முழங்கால் மூட்டுகள் (KNEE JOINTS), கோள் மூட்டுகள் (SHOULDER JOINTS), மணிக்கட்டுகள் (WRIST JOINTS), கணுக்கால் மூட்டுகள் (ANKLE JOINTS), ஆகியவற்றில் வலியும், வீக்கமும் ஏற்படும்.
வலியானது தேள்கடியினைப் போல மிகுந்த வேதனை தரக் கூடியதாக இருக்கும்.
வலியானது நிலையில்லாமல் மூட்டிற்கு மூட்டு மாறிக் கொண்டிருக்கும். (SHIFTING PAIN) கூடவே காய்ச்சலும் சேர்ந்து கொள்ளும்.
கால் மூட்டுக்களின் இறுக்கத்தினால் அதிகாலையில் தரையில் கால் ஊன்றி நடப்பதில் சிரமம் ஏற்படும். (MORNING STIFFNESS).
மேலும் பசியின்மை, எடை குறைதல், மயக்கம், எலும்புகள் நலிவடைதல், இரத்த சோகை, ஈசினோபிளியா, இதய தசைகளில் வேக்காடு பெரிபிரல் நியூரோபதி, எலும்பு மூட்டுகளில் முடிச்சுகள், வக்ர தன்மை போன்றவைகள் நீண்ட காலமாக நீடித்திருக்கும் RA வினால் ஏற்படும்.
நோயினைக் கண்டறிதல்:
MORNING STIFFNESS -11/2 மணி நேரத்திற்கு மேல் நீடித்திருத்தல்.
மூன்று அல்லது மேற்பட்ட மூட்டுகளின் பாதிப்பு.
இடது மற்றும் வலது பக்க மூட்டுக்கள் ஒரே நேரத்தில் பாதிப்படைதல். (SYMETRICAL ARTHRITIS)
மூட்டுகளில் முடிச்சுகள் (RHEUMATOID NODULES) ஆகிய அறிகுறிகள் 6 வாரங்களுக்கு மேல் நீடித்திருக்குமானால் RA முடக்குவாதம் என்னும் கருத்தில் கொள்ளலாம். RF - ருமடாய்ட் ஃபேக்டர், ESR, X-RAY, USG, MRI, டாப்ளர் USG மற்றும் ஆர்த்ரோ கிராம் போன்ற பரிசோதனைகளின் மூலம் முடக்குவாதத்தினை (RA) உறுதிப் படுத்தலாம்.
கால் விரல்களின் மூட்டுகள் பாதிப்படைதல், புகை பிடித்தல், RF மற்றும் ANTI – CCP பரிசோதனை பாஸிடிவ் போன்ற காரணிகள் நோயின் தீவிரத்தை உணர்த்துவதுடன் குணமடைதலையும் கடினமாக்கி விடுகின்றன.
சிகிச்சை முறைகள்:
DMRD – DISEASE MODIFIED ANTI RHEUMATIC DRUGS மற்றும் ANTI – TNF சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிகிச்சையின் முன்னேற்றத்தினை பொருத்து ப்ரட்னி சோலன் 7.5 Mg – 10 Mg அல்லது மிதைல் பிரட்னி சோலன் 80 Mg – 120 Mg நாள் ஒன்றுக்கு ஒருமுறை மூன்று மாதங்கள் கொடுக்க வேண்டும். NSAID மருந்துகள் வலியினைப் போக்குவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
DMARD சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது FBC, LFT பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ளப்படுகிறது. சைனோவெக்டமி, ஆர்த்ரோ ப்ளாஸ்டி, ஆஸ்டியோ டோமி போன்ற அறுவை சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆயுர்வேத சிகிச்சை முறைகள்:
‘லங்கனம் பரம ஒளஷதம்” ஆமவாத சிகிச்சையில் லங்கனம் (FASTING) மிகச் சிறந்த மருத்துவ முறையாக செயல்படுகின்றது.
ஏரண்டதைலம் (Castor Oil) ஒரு ஸ்பூனுடன் சுக்கு கஷாயம் சேர்த்து உட்கொள்ள ஆமவாதம் தணியும்.
தச மூலாரிஷ்டத்துடன் சிம்ஹநாத குக்குலு 250Mg சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவிற்குப் பின் சாப்பிட ஆமவாதம் குறையும்.
ராஸ்னா குக்குலு (RG) 500Mg, குக்குலு ராஸ்னாதி கஷாயத்துடன் சாப்பிட வீக்கத்துடன் கூடிய ஆமவாதம் தணியும்.
இதயத்தில் உண்டாகும் பாதிப்பினைப் போக்க பலாரிஷ்டம், பார்த்தாரிஷ்டம் போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம்.
சிறிய ராஸ்னாதி, வல்ய ராஸ்னா, கஷாயம், வைச்வாரை சூரணம், அஷ்ட சூரணம், திரிபலா குக்குலு, கைசோர குக்குலு, யேகராஜ குக்குலு போன்ற மருந்துகளை நோயின் தன்மையைப் பொருத்து எடுத்துக் கொள்ள ஆமவாதம் தணியும்.
பஞ்ச கர்ம சிகிச்சைகளில் பொடிகிழி, இலைகிழி, வாலுகாஸ்வேதனம், அப்யங்கம் மற்றும் பிழிச்சல், விரேசனம் போன்றவைகளைப் பயன்படுத்தலாம். தைலங்கள் ஆமவாதத்தினை அதிகமாக்கும் என்றாலும், சைந்தவாதி தைலம், லசுன தைலம், கொட்டம் சுக்காதி தைலம் ஆகியவை ஆமவாதத்தினைக் குறைப்பவை.
பத்திய முறைகள்:
ஆமம் நீங்கும் வரை வெஜிடபுள் சூப் அருந்த வேண்டும்.
சுக்கு அல்லது திரிகடு (சுக்கு. மிளகு, திப்பிலி) சிறிது சேர்த்து காய்ச்சிய தணணீரை மட்டுமே அருந்த வேண்டும்.
லசுன ஷீரபாகம் எடுத்துக் கொள்ளலாம்.
– 1 பங்கு பூண்டு 8 பங்கு பசும்பால் 32 பங்கு தண்ணீர் சேர்த்து பாலின் அளவு வரை வற்ற வைத்து, வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
பார்லி, மூக்கரட்டைக் கீரை, இஞ்சி, கோதுமை போன்றவைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால், பால் பொருட்கள், தயிர், வாழை, கொய்யா, வெள்ளரி, குளிர்பானங்கள், ஏர்கண்டிஷன் ஆகிய வற்றைத் தவிர்க்க வேண்டும்.எவ்வளவுதான் பரம்பரையின் தாக்கம் இருந்தாலும் நல்ல சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி, தேவையான அளவு உறக்கம், மன அழுத்தமின்மை போன்றவை இருந்தால் RA என்ன எவ்வளவு பெரிய, கொடிய வியாதியாய் இருந்தாலும் நம்மைத் தாக்க இயலாது!
நலமுடன் வாழ்வோம்!‘
Dr.A.சதீஷ்குமார் B.A.M.S
ஆலோசனை மருத்துவர்,
அஷ்டாங்க ஆயுர்வேதிக் கிளினிக், திருச்சி.
Cell:9894674424

0 comments:
Post a Comment